A+ A-

பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பெயரை சொல்லவில்லை

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர். அவர் அடிக்கடி தான் பல பாலியல் தொல்லைகளை சந்தித்ததாக இதற்குமுன் ட்விட்டரில் கூறியுள்ளார்.
தற்போது மீடூ விவகாரம் பெரிய அளவில் பிரபலம் ஆகியுள்ள நிலையில், ரசிகர் ஒருவர் "ஏன் உங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பெயரை வெளியிடவில்லை? தயக்கமா?" என கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்துள்ள கஸ்தூரி "தயக்கமில்லை. பரிதாபம். ஏற்கனவே என்கிட்டே செருப்படி வாங்கிட்டு இன்னிக்கு வரை பொது இடத்துல என்னை பாக்கும் போதெல்லாம் எதுவுமே நடக்காதமாதிரி மழுப்பற சிலர். இறந்துவிட்ட ஒருவர், இழுத்துக்கொண்டு ஒருவர். இவங்களை பத்தி இப்போ பேசுறதுக்கு எனக்கே பாவமா இருக்கு," என கூறியுள்ளார்.