A+ A-

ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்தமுடியாதுனு சொன்ன விவேக் செய்த காரியத்தை பாருங்க - கலாய்க்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் காமெடியென்றால் யாரையாவது அடிப்பது, அடிவாங்குவது மட்டும் என்று இல்லாமல் தனக்கென தனி பாணியை கொண்டவர் விவேக்.

எப்போதும் முடிந்தவரை தன்னுடைய படங்களில் பகுத்தறிவு வசனங்கள் மூலம் மூடநம்பிக்கைளை சாடுவார்.

இவர் சமீபத்தில் திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் 144 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் புஷ்பகரணி விழாவில் கலந்து கொண்டார். இதில் வேதத்தை ஓதியபடியே ஆற்றில் குளித்தார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் “எல்லாநாளும் ஓடுற அதே தண்ணி தானடா இப்பவும் ஓடுது. இப்ப மட்டும் எப்பிடிடா புனித நீராகும். ஃபன்னி பீப்புள்ஸ்” என்று அவருடைய புகைப்படத்தை வைத்தே கலாய்க்கின்றனர்.

ஆனால் இது ஆறுகளை பாதுகாப்பதற்காகத்தான் இதில் கலந்துகொண்டேன் என்று தன்னுடைய டிவிட்டர்பக்கத்தில் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.