A+ A-

எங்க தொட்டாங்கனு சொல்லனுமா அத வேற கேமரா வச்சி காட்டணுமா.! வைரலாகும் சின்மயி பேட்டி.!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாடகி சின்மாயி பேட்டி கொடுத்துள்ளார், அவர் கூறியதாவது இந்த சமூகத்தில் ஆண் குழந்தைகள்,பெண் குழந்தைகள் திருநங்கைகள் திருநம்பிகள் என பலர் பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது தான் அதை பற்றிய பல உண்மைகள் வெளிவருகின்றன இதற்கு முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஆதரவு தந்து வருகிறார்கள் தொடர்ந்து பேட்டி கொடுத்த சின்மயி நான் சொன்ன குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மறுப்பு தெரிவிக்க வில்லை. சமீப காலமாக என்னை அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது அதில் இதுவும் ஒன்று என்று தான் கூறினாரே தவிர மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை, என்னுடன் கூட இருக்கும் பாடகிகளுக்கு குரல் இல்லை கணவன் தாய் உள்ளிட்டவை தாண்டி வர வேண்டும் என்ற பிரச்சினை உள்ளது அவர்களுக்காக தான் நான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடன் கூட இருக்கும் பாடகிகளுக்கு நடந்த விஷயம், நான் இரண்டு மூன்று பாடலை பாடிவிட்டு இதுபோல் பேசினால் நீங்கள் பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள் என கூறி விடுவார்கள் ஆனால் நான் தற்பொழுது எட்டு மொழிகளில் பாடி இருக்கிறேன் 96 படத்தில் அனைத்து பாடல்களும் பாடி உள்ளேன் அப்படி இருந்தும் கூட நான் பப்ளிசிட்டிக்காக பேசி வருகிறேன் என்று கூறுகிறார்கள் என மிக ஆதங்கத்தோடு சின்மயி பேசினார்.