A+ A-

சர்கார் பட பிரச்சனையில் முருகதாஸ் எழுதும் கதை குறித்து உண்மையை வெளியிட்ட பிரபல தயாரிப்பாளர்

வருண் என்பவர் செங்கோல் என்ற பெயரில் 2007ம் ஆண்டு ஒரு கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார். அவரின் கதை போலவே முருகதாஸின் சர்கார் கதை இருக்கிறது, என் கதையை அவர் திருடிவிட்டார் என இப்போது பெரிய பிரச்சனையே நடக்கிறது.

தற்போது முருகதாஸிற்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர் தாகூர் மது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர், கதை எழுதுவதில் முருகதாஸ் மிகச் சிறந்தவர், ஒரு கதைக்காக அவர் எவ்வளவு உழைப்பார், ஒவ்வொரு காட்சிக்கும் எப்படி யோசிப்பார் என்பது எல்லாம் நன்றாக எனக்கு தெரியும். அவரே தான் கதைகள் எழுதுவார், அதில் எந்த சந்தேகமும் இல்லை.

சினிமா, சொந்த வாழ்க்கை என இரண்டிலும் அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும். 18 வருடங்களில் நான் அவருடைய 5 படங்களை தயாரித்துள்ளேன்.

மிகச் சிறந்த அறிவாளி, அருமையான இயக்குனர், படம் சம்பந்தமாக எந்த ஒரு விஷயத்துக்கும் அவர் தாமதம் செய்ததில்லை என பதிவு செய்திருக்கிறார்.