A+ A-

நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து ஓய்வு!

மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னனி நடிகையானவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்துள்ள சண்டக்கோழி 2-ம் பாகம், சர்கார் படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இந்நிலையில் ஒரே ஒரு மலையாளப்படம் தவிர வேறு எந்தப் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. 



இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகையில், 3 ஆண்டுகளாக சரியான தூக்கம் இல்லை, ஓய்வு இல்லை. அதனால் 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போகிறேன். இதற்காக வெளிநாட்டுக்கெல்லாம் போகவில்லை. என் வீட்டிலேயே இருந்து தோட்ட வேலை, சமையல் வேலை செய்து பொழுதை போக்குவேன். 

மேலும் வயலின் கத்துக் கொண்டிருந்தேன், அதை தொடர்வேன். 20 கதைகள் கேட்டு வைத்திருக்கிறேன். எதிலும் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த ஓய்வுக்கு பிறகு தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.