A+ A-

முன்னணி நடிகரின் படத்தில் மேலாடையின்றி கவர்ச்சியாக நடித்துள்ள நடிகை ஆண்ட்ரியா..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளை ஒருவராக கருதப்படும் ஆண்ட்ரியா, நடிப்பு மட்டுமின்றி ஒரு பின்னணி பாடகையும் கூட. சமீபத்தில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த ‘தரமணி’ படத்தில் தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படத்தில் இவருக்கு விருதுகள் கூட கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு அப்படி ஏதும் விருதுகள் கிடைக்கவில்லை.

சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விஸ்வருபம் படத்திலும் ஒரு மாஸ் பர்பார்மன்ஸ் கொடுத்திருந்தார். தற்போது நடிகை ஆண்ட்ரியா, தனுஷ் நடித்துள்ள வட சென்னை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இடையேயான முத்த காட்சி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதால் இந்த படத்தில் பல கவர்ச்சியான காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதே போல படத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ரொமான்ஸிற்கு ஈடாக அமீர் மற்றும் ஆண்ட்ரியா கட்சிகளிலும் கிளுகிளுப்பிற்கு பஞ்சமே இருக்காதாம்.

இந்த படத்தின் நடிகை ஆண்ட்ரியா, அமீரின் மனைவியாக நடித்துள்ளார்.அதனால் இவர்கள் இருவருக்கும் படத்தில் பல நெருக்கமான காட்சிகள் இருக்கும் என்றும் ஒரு காட்சியில் நடிகை ஆண்ட்ரியா மேலாடையின்றி படு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மேலும் அதிகரித்துள்ளது.