A+ A-

ரேஸ் பிரியரான தல அஜித்திற்கு பிடித்த பைக் நம்பர் எது தெரியுமா? விஸ்வாசத்திலும் அது தொடர்ந்துள்ளது

தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. இதன் செகண்ட் லுக் நேற்று காலையில் வெளியானது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்திருந்ததால் போஸ்டர் வந்தவுடனே லைக்ஸ் எகிறியது. ஆனால் போஸ்டர் நல்லா இருந்ததா என்று கேட்டால் பெரும்பாலான ரசிகர்கள் இல்லை என்று தான் சொல்வார்கள்.

அந்த அளவிற்கு போஸ்டரில் பல தவறுகள் இருந்தன. அதனால் போஸ்டரை எடிட் செய்தவரை தான் ரசிகர்கள் வசைப்பாடி வந்தனர். இவ்வளவு பிரச்சனைக்கு நடுவிலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அஜித் அமர்ந்திருக்கும் பைக்கின் நம்பர் 2435. இது ஒரு splender பைக்கினுடையது அதெல்லாம் வேறு.

அதைவிட முக்கியமாக இதே நம்பரில் தான் வாலி படத்திலும் [என்ன கொஞ்சம் மாறுதலாக 2534ல்] அஜித் பைக்கை வைத்திருந்தார். அந்த படம் ஹிட் அடித்ததால், ஒரு வேளை இதிலும் செண்ட்மெண்ட் வைத்திருப்பார்களோ என ரசிகர்கள் சந்தேகப்பட்டு வருகின்றனர்.