A+ A-

சின்மயி சர்ச்சை பற்றி லதா ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்து

சின்மயி மீடு புகார் தான் தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலரும் இது பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது பற்றி பேசிய ரஜினிகாந்த் "இது பெண்களுக்கு சாதகமான இயக்கம். இதை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது" என கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது மீடூ பற்றி பேசியுள்ளார்.

"மீ டூ விவகாரத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறார்கள். இதில் நான் தலையிட கூடாது. எங்கேயும் தவறு நடக்கக்கூடாது." என மீ டூ சர்ச்சை பற்றி எந்தவித அழுத்தமான கருத்தும் தெரிவிக்காமல் அவர் பேசியுள்ளார்.