A+ A-

வரிசையாக பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் நடிகர்கள்.. இப்போது ராதாரவி!

கவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது பிரபல நடிகர் ராதாரவியும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இணையதளத்தில் பெண்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தை மீடூ. இதற்கு என்ன அர்த்தம் என்றால் ஆண்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் என்று அர்த்தம். தற்போது அந்த டாக்கில் நிறைய பெண்கள் திடுக்கிடும் விஷயங்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். 

அவரை தொடர்ந்து ஒரு பெண் நடிகர் ராதா ரவியால் தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பதிவு செய்துள்ளார். அதனை சின்மயி தனது டுவிட்டரிலும் ஷேர் செய்திருக்கிறார். இந்த வரிசையில் நடிகர் ராதாரவி மீது இணையதள பத்திரிக்கையாளர் காவ்யா நக்‌ஷத்ரா என்பவர் தனது டுவிட்டரில் பாலியல் புகார் அளித்துள்ளார்.  

அந்த டிவிட்டில் ‘வைரமுத்து தொடர்பான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அதே மாதிரி ஒரு நிகழ்வு நடிகர் ராதாரவியால் எனக்கும் ஏற்பட்டது. ஒரு வேலை சம்மந்தமாக அவரை அவரது அலுவலகத்தில் சந்திக்க சென்ற போது அவர் என்னை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார். 
வேலையை நல்லபடியாக செய்து முடி. நாம் பிறகு சந்திப்போம். நீயும் நல்லாத்தான் இருக்க. நீ வரும்போது தனியாக வா’. என்றார். அந்த வேலையை அதோடு நிறுத்தி விட்டேன்’’ என்றார்.