A+ A-

வைரமுத்து பாலியல் விவகாரம் - முதன்முறையாக கருத்து சொன்ன மதன் கார்க்கி

தமிழ் சினிமாவில் வைரமுத்து மீது சின்மயி சொன்ன பாலியல் சர்ச்சை கொழுந்து விட்டு எரிகிறது. தினமும் பலர் இது போன்ற புகார்களை திரைப்பிரபலங்கள் மீது கூறி வருகின்றனர்.

இதுபற்றி வைரமுத்துவின் மகன் இதுவரை கருத்து சொல்லாமல் இருந்தநிலையில் தற்போது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருத்து சொல்லியுள்ளார்.

ஆனால் நேரடியாக சொல்லாமல், லிங்கா படத்தில் வரும் உண்மை ஒரு நாள் வெல்லும் பாடலை பகிர்ந்து அதில் பொய்கள் புயல்போல் வீசும் - ஆனால், உண்மை மெதுவாய் பேசும்! என்ற தன்னுடைய தந்தை வைரமுத்துவின் வரியை குறிப்பிட்டுள்ளார்.

எனவே உண்மை விரைவில் வரும் என்பது போல கருத்திட்டுள்ளார்.