A+ A-

நடிகை டாப்சி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கேம் ஓவர் (GameOver )என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு திரும்பியுள்ளார்.

தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. இப்படத்தைத் தொடர்ந்து வரிசையாக தமிழில் பல படங்களில் நடித்தார். இதில், பேய் படங்களும் அடங்கும். இந்த நிலையில், கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக கருதப்படுவது, ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தான். இந்நிறுவனம் விக்ரம் வேதா மற்றும் தமிழ் படம் 2 ஆகிய படங்களை தயாரித்துள்ளது. தற்போது இந்நிறுவனம் அடுத்த பெரிய படம் ஒன்றை அறிவித்துள்ளது. 
தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்குகிறார். இப்படத்திற்கு கேம் ஓவர் என்று டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தில், நடிகை டாப்சி நடிக்கிறார். இப்படத்தின் மூலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், சக்கர நாற்காலியில் இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்துள்ளது போன்ற மருத்துவக்கட்டு போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.