A+ A-

NGK படத்தில் உண்மையில் சூர்யாவின் வேடம் இதுதானாம்

சூர்யா நடிப்பில் உருவாகி வருகிறது NGK படம். செல்வராகவன் இயக்கி வருகிற இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

தீபாவளிக்கு ரிலீஸ் என முதலில் சொல்லப்பட்ட இப்படம் பிறகு தள்ளிபோனது. இது முழுக்க முழுக்க அரசியலை மையகருத்தாக கொண்ட படம் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடித்து வருகிறார் என சொல்லப்பட்டு வரும் நிலையில் அவர் அந்த வேடத்தில் மட்டும் நடிக்கவில்லையாம். மற்றொரு வேடமாக விவசாயி வேடத்திலும் நடித்து வருகிறாராம்.

மேலும் இப்படம் அரசியல்வாதிகளின் தலையீட்டாலயே இவ்வளவு தாமதமாகுவதாக சொல்லப்படுகிறது. டிசம்பரின் இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.