A+ A-

தனது காதலருடன் உறவு கொள்ளும் வீடியோவை வெளியிட்ட நடிகை

தனது காதலருடன் உறவு கொள்ளும் வீடியோவை வெளியிட்டு பாலிவுட் நடிகை பூனம் பாண்டே சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை சில நடிகைகள், குறிப்பாக வாய்ப்பில்லாத நடிகைகள் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன் மூலம் சர்ச்சையை ஏற்படுத்தினால், அதனால் பிரபலமடைந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
குறிப்பாக பாலிவுட் கவர்ச்சி நடிகை பூணம் பாண்டே இதில் உச்ச கட்டம். மிகவும் கவர்ச்சியான தனது புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
சமீபத்தில் தனது காதலர் சாம் என்பவருடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அவர் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதோடு, You can have this too, Be the top fan என தலைப்பு கொடுத்துள்ளார்.
ஆனால், சில மணித்துளிகளில் அந்த வீடியோவை அவர் நீக்கிவிட்டார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான Nasha, The journey of karma ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன. எனவே, இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு அவர் சர்ச்சையை ஏற்படுத்தி சினிமா வாய்ப்பை தேடுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.