A+ A-

இணையத்தை கலக்கும் நடிகை சன்னி லியோனின் நடனம்

கவர்ச்சி நடிகை சன்னி லியோனும், அவரது கணவரும் இணைந்து ஆடிய நடனம் இணையத்தில் பரபரப்பாய் பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் தங்கி உள்ள அந்த இருவரும் இணைந்து, புதிதாக வெளியான சிம்மா என்ற இந்தி படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளனர். அந்த படத்தில் ரண்வீர் சிங்கும், நடிகை சாராவும் இணைந்து ஆடிய 'அனக் மேரி' என்ற பாடல் வரிகளுக்கு, இருவரும் அதே தாளத்தில், அதே அசைவுகளை வெளிப்படுத்தி ஆட்டம் போட்டு உள்ளனர்.

சன்னி லியோனின் இஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 80 லட்சமாக உயர்ந்துள்ளதை அடுத்து, இருவரும் இணைந்து நடனமாடி உள்ளதாகவும், இந்த நடனக்காட்சிகள் ரசிகர்களுக்கு சமர்ப்பணம் என்றும் இருவரும் கூறியுள்ளனர்.