A+ A-

எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா? பிரியங்கா புகைப்படத்தை பார்த்து கடுப்பான சின்மயி!

கடந்த வருடம் வெளியாகி ஹிட்டான பாடல் காதலே காதலே. இந்த பாடலை பாடியவர் சின்மயி. இன்னும் பல வெற்றிபாடல்களை பாடியுள்ளார். ஆனாலும் இவர் பிரபலமானது மீடூ சர்ச்சையில் தான். தற்போது இவர் டிரெண்டாகி வரும் #10yearchallengeல் நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தையும் அவரது கணவர் வயதை கிண்டலடித்து வெளியான மீமை பகிர்ந்துள்ளார்.

இதில் எவ்வளவு பெரிய அபத்தம் தெரியுமா? ஒரு ஆண் 25 வயசு குறைவான பொண்ணை கல்யாணம் பண்ணாலும் கண்டுக்காத சமூகம் ஒரு பொண்ணு 10 வயசு வித்தியாசம் உள்ள பையனை கல்யாணம் பண்ணா இப்படியா கிண்டல் பண்ணுவீங்கனு போட்டுருந்தார்.


ஒரு ரசிகர் அதுக்கு நஸ்ரியா கல்யாணம் பண்ணும்போது கூடதான் அவரை விட பகத் பாசிலுக்கு வயசு ரொம்ப அதிகம்னு கிண்டல் பண்ணி மீம்ஸ் போட்டாங்க. அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையானு பதிலடி கொடுத்திருக்காரு. நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவரை விட 13 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.