A+ A-

ஹன்சிகா அடித்த பல்டி, பிகினி புகைப்படம் இப்படியா வெளிவந்தது?

தனது டிவிட்டர் கணக்கு மற்றும் போன் ஹேக் செய்யப்பட்டதாக நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியானவர் ஹன்சிகா. குஷ்புவை ஞாபகப்படுத்தும் சாயலில் இருந்ததால், தமிழ் ரசிகர்கள் அவரை குட்டி குஷ்பு என்றே செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.
முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவிற்கு திடீரென படவாய்ப்புகள் குறைந்தன. இதனால் சில காலம் அவர் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. தற்போது அவரது நடிப்பில் மஹா படம் வெளிவர இருக்கிறது.

இதையும் படியுங்க :ஹன்சிகா வெளியிட்ட படுகவர்ச்சி புகைப்படம் - அம்மாடி நீயும் இப்படித்தானா ..?
இந்நிலையில் உள்ளாடையுடன் இருக்கும் நடிகை ஹன்சிகாவின் போட்டோக்கள் நேற்று இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. மியாமி கடற்கரைக்கு சுற்றுலா சென்றபோது, ஹன்சிகா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இவை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள நடிகை ஹன்சிகா, தனது போன் மற்றும் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாகவது, "எனது போன் மற்றும் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஏதாவது பதிவுகள் வந்தால் பொருட்படுத்த வேண்டாம். இதனை சரிசெய்ய என்னுடைய குழு முயற்சி செய்து வருகிறது".