A+ A-

தமிழ் ராக்கர்ஸில் பேட்ட, விஸ்வாசம் லிங்க் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தல அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான  பேட்ட, தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான விஸ்வாசம் ஆகிய இரு திரைப்படங்களும் நேற்று காலை உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது


மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டம் என திருவிழா போல் தலைவர் மற்றும் தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஹாஸ்டல் வார்டனாக தலைவர் நடித்துள்ள பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் வசனங்கள் வசனங்கள் ரஜினி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.



குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. தல ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் திரைப்படம் ரசிக்க வைப்பதாகக் கூறப்படுகிறது. 21 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினியின் அருணாசலம், அஜித்தின் ராசி ஆகிய படங்கள் 3 நாள் இடைவெளியில் மோதின. ஆனால், முதல் முறையாக ரஜினி, அஜித்தின் படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தல அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் சட்ட விரோதமாக தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது.

முன்னதாக பேட்ட படத்தை இணையதளம் மற்றும் கேபிள்களில் வெளியிட தடைக்கோரி சன் நெட்வொர்க் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமந்திரன், சட்ட விரோதமாக இணையம் மற்றும் கேபிள்களில் வெளியிட தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.