A+ A-

ரஜினி ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - கொந்தளித்த விஷால்

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் சமீபத்தில் வெளிவந்த பேட்ட படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் உலகம் முழுவதும் இந்த படம் வசூல் குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தினை திருட்டு தனமாக பதிவிறக்கம் செய்து ஒரு அரசு பேருந்தில் ஒளிபரப்பியுள்ளனர். அந்த விடியோவை ரஜினி ரசிகர் ஒருவர் படம் பிடித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதனால் பேட்ட படத்திற்கு நஷ்டம் ஏற்படும் என கூறி ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ள நடிகர் விஷால் ட்விட்டரில் அரசுக்கு இதுபற்றி கோரிக்கை வைத்துள்ளார். ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.