A+ A-

உச்சக்கட்ட சாதனையை படைத்தது ரவுடி பேபி!

தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பில் உருவான மாரி-2 படத்தில் ரவுடி பேபி பாடல் பயங்கர ஹிட்டானது. இதற்கு நடன ஆசிரியர் பிரபுதேவா முக்கிய காரணமாக அமைகிறார்.
கடந்த ஜனவரி 2ஆம் தேதி வெளியிடப்பட்ட இப்பாடல் தொடர்ந்து பல பாடல்கள் மற்றும் வீடியோக்களின் சாதனைகளை முறியடித்த வண்ணம் இருந்தது. தமிழ் பாடல்களிலேயே அதிக பார்வையாளர்களை பெற்ற வொய் திஸ் கொலவெறி பாடலை முறியடித்தது தான் உச்சக்கட்டமாக அமைந்தது.
இந்நிலையில் அதைவிட உச்சக்கட்டமாக பாடல்கள் மற்றும் வீடியோ என எல்லாவற்றையும் சேர்த்து தென்னிந்திய அளவில் பார்வையாளர்களில் முதலிடத்தில் இருந்த சாய் பல்லவியின் தெலுங்கு பாடலான வச்சிண்டே பாடலின் சாதனையை முறியடித்து ரவுடி பேபி பாடல் முதலிட அரியணையில் ஏறியுள்ளது.
182 மில்லியன் பார்வையாளர்களை கொண்ட வச்சிண்டே பாடலை 183 மில்லியன் பெற்று முறியடித்துள்ளது ரவுடி பேபி பாடல். இந்த சாதனையை தனுஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.