A+ A-

மீண்டும் முட்டி கொண்ட அஜித் விஜய் ரசிகர்கள் – இப்படியொரு ஹேஸ்டேக் தேவையா?

விஸ்வாசம் படம் குறித்த தகவலால் அஜித் விஜய் ரசிகர்கள் மீண்டும் ட்விட்டரில் முட்டி கொண்டு மாறி மாறி தாக்கி கொண்டு வருகின்றனர்.

தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்று சமீபத்தில் செய்தியில் விஸ்வாசம் திரைப்படம் அமெரிக்காவில் 30 % நஷ்டம் எனவும் ஆனால் தமிழகத்தில் சுமார் 18 கோடி லாபம் கொடுத்த படம் எனவும் பாகுபலி பிறகு இப்படியான ஒரு லாபத்தை கொடுத்த திரைப்படம் விஸ்வாசம் தான் எனவும் செய்தி வெளியிட்டு இருந்தது.

சில விஜய் ரசிகர்கள் இந்த தகவலை மாற்றி தமிழகத்தில் விஸ்வாசம் 30 % நஷ்டம் என பரப்ப தொடங்கியதே தற்போதைய சண்டைக்கு காரணமாகியுள்ளது.

இப்படியான தகவலை பரப்ப விஸ்வாசம் #Viswasam30crLoss என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்ய அஜித் ரசிகர்கள் தற்போது பதிலுக்கு ஒரு ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அதாவது #தாழ்வுமனப்பான்மையில்vijayFans என்ற ஹேஸ்டேக்கில் பொய்யான தகவலை பரப்பியவர்களை விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் தற்போது மீண்டும் ட்விட்டர் பக்கமே போர்க்களமாகியுள்ளது.

இரண்டு தரப்பு ரசிகர்கள் அவரவர் நடிகர்களின் படங்களை லாபமா? நஷ்டமா? விமர்சிப்பதை விட்டு விட்டு படங்களை மட்டும் கொண்டாடினாலேயே இப்படியான பிரச்சனைகள் ஏற்படாது என நடுத்தர நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.