A+ A-

நான் எவ்வளவோ செய்திருக்கிறேன், ஆனால் மீடு புகார் வரவே இல்லை

சினிமா துறையில் பாலியல் புகார்கள் நாளுக்கு நாள் அதிகம் வந்துகொண்டே இருக்கிறது. ஹாலிவுட்டில் துவங்கிய மீடு புகார்கள் தற்போது பாலிவுட்-கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் வந்துள்ளது. வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் இதனால் சர்ச்சையிலும் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் சத்ருஹன் சின்ஹா தற்போது அளித்துள்ள பேட்டியில், "நான் எவ்வளவோ செய்திருக்கிறேன். ஆனால் என்னை பற்றி எந்த மீடு புகாரும் வரவில்லை. அப்படி யாராவது சொல்ல விரும்பினால் தயவுசெய்து சொல்ல வேண்டாம். நான் இப்போது மனைவியுடன் சந்தோசமாக இருக்கிறேன்" என கூறியுள்ளார்.
சத்ருஹன் சின்ஹா நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகள் சோனாக்ஷி சின்ஹா லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் என்பது கூடுதல் தகவல்.