A+ A-

ஒரு இரவுக்கு ஒரு கோடியா? சர்ச்சைக்கு நடிகை அளித்துள்ள விளக்கம்

பிரபல நடிகை சாக்ஷி சவுத்ரி சமீபத்தில் ட்விட்டரில் தனக்கு பலரும் ஒரு இரவுக்கு ஒரு கோடி தருகிறேன் என கூறி அழைப்பதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.
பல தெலுங்கு படங்களில் நடித்துள்ள அவர் ட்விட்டரில் தொடர்ந்து மிக கவர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிட்டு வருகிறார். அதை பார்த்து தான் பலர் இப்படி நடிகையை அணுகுகிறார்கள் என கூறப்பட்டது.
இந்நிலையில் சாக்ஷி சவுத்ரி அளித்துள்ள புதிய பேட்டியில் தான் அப்படி பதிவிடவே இல்லை என தெரிவித்துள்ளார். "என் ட்விட்டர் கணக்கை வேறொருவர் கவனிக்கிறார். அவருக்கு அப்படி மெசேஜ் வந்திருக்கும், அதனால் அவர் அப்படி பதிவிட்டிருக்கலாம்" என விளக்கம் கொடுத்துள்ளார்.