A+ A-

அந்தரங்க போட்டோ லீக்கானதால் தற்கொலைக்கு முயற்சித்தேன்!! பிரபல நடிகை பகீர்

என்னை அசிங்கமாக மார்பிங் செய்து போட்டோ வெளியிட்டதால் தற்கொலைக்கு முயற்சித்தேன் என நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயபிரதா கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1980களில் பேமசான நடிகை என்றால் அதில் நடிகை ஜெயப்பிரதாவும் ஒருவர். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது இந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் சமாஜ்வாடி கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டு முழு நேர அரசியல்வாதியாக இருந்தார். இவர் எம்.பி.யாக பதவி வகித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் அமர்சிங்குடன் சேர்த்து என் போட்டோவை மார்பிங் செய்து ஆபாசமாக போட்டோக்களை வெளியிட்டனர். அமர்சிங் எனக்கு தெய்வம் மாதிரி. அவருடன் என்னை சேர்த்து வைத்து பேசியது எனக்கு மிகவும் மன வருத்தத்தை தந்தது. ஒரு கட்டத்தில் தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டேன்.
பிறகு தான் பேசிக்கொண்டிருப்பவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள், நாம் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நம் வேலையை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். பெண்கள் தைரியமாக இருக்கவேண்டும். அதுவே அவர்களுக்கு ஊன்றுகோள் என அவர் கூறினார்.