A+ A-

ரசிகர்களின் கனவு கன்னியுடன் விஜய்க்கு இரண்டாவது திருமணம்? – ஷாக்கிங் தகவல்.!

ரசிகர்கள் பலரின் கனவு கன்னியுடன் இயக்குனர் ஏ.எல் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.எல் விஜய். இவர் தல அஜித்தின் கிரீடம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களை இயக்கி இருந்தார்,

தளபதி விஜயை வைத்து தலைவா படத்தை இயக்கிய போது அமலாபாலுடன் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ரெண்டே வருடங்களில் முடிவு வந்தது.

அதன் பின்னர் அமலாபால் பழையபடி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஏ.எல் விஜய்க்கு சாய் பல்லவியுடன் இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

விஜய் இயக்கிய கரு திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்த போது இவர்களுக்கிடையே நல்ல புரிதல் ஏற்பட்டு அந்த புரிதல் தற்போது காதலாகி இருப்பதாக கூறப்படுகிறது. இருவருக்கும் வெகு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த தகவல் நிச்சயம் வதந்தியாக தான் இருக்கும் என நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.

இயக்குனர் விஜயோ அல்லது சாய் பல்லவியோ மனம் திறந்தால் தான் இது வதந்தியா? இல்லையா? என்பது தெரிய வரும்.