A+ A-

திருமணம் முடிந்து நான்கே மாதத்தில் பிரியங்கா சோப்ரா விவாகரத்து முடிவு? - ரசிகர்கள் ஷாக்

இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கால்பதித்தவர் பிரியங்கா சோப்ரா. அவர் சில மாதங்கள் முன்பு தான் அமெரிக்க பாடகர் மற்றும் நடிகரான நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் திருமணம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. Googleல் இவர்கள் திருமணம் பற்றிய தேடல் தான் சென்ற வருடத்தில் முதல் இடத்தில் இருந்தது.

இந்நிலையில் நான்கு மாதங்களிலே பிரியங்கா-நிக் ஜோடி விவாகரத்தை நோக்கி செல்வதாக தகவல் பரவி வருகிறது. வெளியில் இருவரும் நெருக்கமாக இருப்பது போல நடந்துகொண்டால் தினம்தோறும் அவர்களுக்குள் பல பிரச்சனைகள் வருவதாகவும் அதனால் அவர்கள் விரைவில் பிரிகிறார்கள் என பல சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இருப்பினும் இந்த தகவல் உண்மையில்லை என பிரியங்கா சோப்ராவிற்கு நெருக்கமான ஒருவர் கூறியதாக மற்றொரு செய்தி உலா வருகிறது.