A+ A-

திருமணத்திற்கு பிறகும் பிரபல நடிகையுடன் தொடர்பு.. போட்டுடைத்த இயக்குனர்

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் தொடர்பில் இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் திரையில் மிகவும் நல்லவர்கள் போல் நடிக்கும் நடிகர்கள் இந்த மாதிரி நடிகைகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் பிரபல நடிகை. மார்க்கெட் இல்லை என்றாலும் அவ்வப்போது படங்களில் நடித்து பிரபலமாகவே உள்ளார். அதேபோல் நடிப்பின் நாயகனாக வலம் வரும் அந்த நடிகர், பிரபல நடிகையுடன் தொடர்பு இருந்ததை நடிகரின் ஆஸ்தான இயக்குனர் போட்டு உடைத்தது தான் இன்று கோலிவுட் முழுவதும் பேச்சாக உள்ளது.

சமீபத்தில் அந்த நடிகரின் நடிப்பில் வெளியான படம் சுமாராகத்தான் இருந்தது. ஆனால் அந்த இயக்குனருக்கு பல வகையில் அந்த நடிகர் உதவி செய்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை அந்த நடிகர் தான் தந்தார்.

ஆனால் திருமணத்திற்குப் பிறகு நடிகர் அந்த பிரபல நடிகையுடன் தொடர்பு இருந்ததை பொதுமேடையில் வெளிப்படுத்தி சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார். இருவருக்குள்ளும் நல்ல புரிதல் மற்றும் அருமையான காதல் உள்ளது என மேடையில் கூறிவிட்டார்.

ஏற்கனவே மீட்டு பிரச்சனையில் சிக்கிய இருவரின் மீதும் சந்தேகம் இருந்த நிலையில், இயக்குனர் கூறியது அந்த நடிகரின் வீட்டில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் இந்த நடிகர் மீது அவ்வப்போது நடிகைகள் குறித்த சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

ஆனாலும் அதை சாமர்த்தியமாக கையாண்டு அப்படி ஒரு நிகழ்ச்சியை நடக்கவே இல்லை என்பதைப் போல் மாற்றி விடுவாராம். திருமணத்திற்குப் பிறகும் அந்த நடிகர் இவ்வாறு நடந்து கொள்வது அதிகமாகி விட்டதாம்.

போனாப் போகுதுன்னு உனக்கு பட வாய்ப்பு கொடுத்ததற்கு, உன்னால என்ன பண்ண முடியுமோ, அதை பண்ணிட்ட என இயக்குனரின் மீது செம காண்டில் இருக்கிறாராம் அந்த நடிகர்.