A+ A-

#Metoo-வில் சிக்கிய தயாரிப்பாளர் - பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகை.

காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில்   பிரபலமானவர் அதிதி ராவ் ஹைதாரி. இவருக்கு சைக்கோ, துல்கர் தர்பார் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய தமிழ் படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

தெலுங்கானாவை சேர்ந்த அதிதி ராவ் தனது படிப்பை முடித்துவிட்டு மும்பையில் மாடலிங் வேலை தேடிய சமயத்தில் படவாய்ப்புகள் கிடைத்ததாகவும், ஆனால் தயாரிப்பாளர் ஒருவர் தன்னைப்  படுக்கைக்கு அழைத்ததாக சில தினங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிதி ராவ் #MeToo பிரச்சினையை கிளப்பியுள்ளது சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியான சம்பவத்தினால் தான் மிகவும் மனவேதனையுடன் இருந்ததாகவும் இதிலிருந்து  வெளிவர சில நாட்கள் ஆனது என்றும் தெரிவித்துள்ளார்.

இவர் நடிப்பு, நடனம் மட்டுமல்லாமல் பாடுவதில் திறமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. லோரியல் இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக அதிதிராவ் தற்போது வலம் வருகிறார்