A+ A-

விளையாட்டு வீராங்கனையாக 80 வயது நடிகை..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழில் வெளிவந்த இரும்பு திரை, தேனிலவு, பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை வைஜெயந்தி மாலா. இவர் ஹிந்தியில் பேர்போன நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஹிந்தியில் 75 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். ஆனால் இவர் முதன் முதலில் அறிமுகமான படம் தமிழில் 1949ஆம் ஆண்டு வெளிவந்த வாழ்கை எனும் திரைப்படம்.

இந்நிலையில் இவர் கோல்ப் விளையாட்டை விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ளது. இதனை பார்த்த பலரும் இந்த வயதிலும் நடிகை வைஜெயந்தி மாலா எப்படி அசராமல் கோல்ப் விளையாடுகிறார் என்று தான்.

இதற்கு நடிகை வைஜெயந்தி மாலா அவர்கள் கூறியது : "நான் இந்த விளையாட்டை எனது சிறு வயதில் இருந்தே நேசிக்கிறேன். என் கணவரும் நான் விளையாடுவதை பார்த்து ரசிப்பார். நான் என் இளம் வயதில் பல விளையாட்டுகளை விளையாடி இருக்கிறேன் குறிப்பாக டேபிள் டென்னிஸ் போன்றவைகளை விளையாடியுளேன்".

மேலும் "என்னை பார்த்து பலரும் கேட்கும் கேள்வி எப்படி இந்த வயதிலும் கோல்ப் விளையாடுகிறீர்கள் என்று தான். நான் தொடர்ந்து கோல்ப் விளையாடி கொண்டு இருப்பது தான் நான் இன்னும் சுறுசுறுப்பாக இருக்க காரணம்" என்று கூறினார்.