A+ A-

பழைய காதலருடன் சேர்ந்து நைட்...:தர்ஷன் ! சனம் மீது சரமாரி புகார்கள்

தன் மீது நடிகை சனம் ஷெட்டி சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பிக் பாஸ் புகழ் தர்ஷன் விளக்கம் அளித்துள்ளார்.

தர்ஷனின் காதலியும் நடிகையுமான சனம் ஷெட்டி, தர்ஷனுக்கு எதிராக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு, தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறிய தர்ஷன், நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு தன்னை ஏமாற்றுவதாகப் பேட்டியளித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த தர்ஷன் விளக்கம் அளித்ததாவது: 2018 ஜனவரியில் இருந்துதான் நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். அப்போது அவர் இரு படங்களில் நடித்து வந்தார்.

எனக்கு இப்போதுதான் வாய்ப்புகள் வருகின்றன. எனவே நம் காதலை வெளியே சொல்லவேண்டாம் என்றார். எனக்கும் அது சரியாக இருந்தது.

வரி விஷயமாக எனக்கு சனம் மூன்றரை லட்சம் கொடுத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அந்தப் பணத்தை அவர் நிறுவனத்துக்கு நான் அளித்துவிட்டேன்.

நிச்சயதார்த்தத்துக்கு அவர் இரண்டரை லட்சம் செலவழித்தார். வேறு எந்தப் பண உதவியும் அவர் செய்யவில்லை. பிக் பாஸ் போட்டியாளர்கள் சிலரிடம் எனக்குத் தொடர்பு உண்டு எனச் சந்தேகப்பட்டு அவர்களிடம் பேசியிருக்கிறார் சனம். எனவே நான் அல்ல, அவர் தான் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார்.

நான் பிக் பாஸுக்குள் இருந்தபோது பாடகி ரம்யாவின் திருமணத்துக்குச் சென்று தன்னுடைய பழைய காதலருடன் இரவில் பார்ட்டியில் இருந்துள்ளார்.

இதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் உள்ளது. பிக் பாஸுக்குப் பிறகு எனக்கு நிறைய பெண்களிடம் தொடர்பு உள்ளது என அவர் சொல்கிறார். அது உண்மை என்றால் அதை நிரூபிக்கச் சொல்லுங்கள் என்றார்.