A+ A-

விஜய்யால் என் படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை, பிரபல நடிகர் ஓபன் டாக்

தமிழ் திரையுலக ரசிகர்களில் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தளபதி விஜய்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

தமிழில் வெளிவந்த வடகறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் அண்மையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த விழாவில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி மூக்குத்தி அம்மன் படத்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தொடர்ந்து பேசும் போழுது "நான் இந்த விழாவிற்கு வருவதற்கு விஜய்யின் மாஸ்டர் படம் தான் காரணம். ஆம் என் படத்தில் ஒரு சண்டை காட்சி உள்ளது, ஆனால் விஜய் அவர்களின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு ஸ்டண்ட் மாஸ்டர் செல்வா அவர்கள் சென்று விட்டதால் என்னுடைய படப்பிடிப்பு இன்று நின்றது. அதனால் தான் இந்த விழாவில் என்னால் கலந்து கொள்ள முடிந்தது" என்று ஜாலியாக பேசினார்.