A+ A-

கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் : கதாநாயகன் குறித்த அறிவிப்பு!

கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின்  ஹிந்தி ரீமேக்கில்  பிரபல பொலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில்  எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கைதி திரைப்படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகியது.

அப்பா – மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியாகிய இந்த திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.