A+ A-

வில்லியாக நடிக்க ஆசைப்படுகிறேன் – நிவேதா தோமஸ்

வில்லியாக நடிக்க ஆசைப்படுவதாக நடிகை நிவேதா தோமஸ் தெரிவித்துள்ளார்.

தனது சினிமா குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்ட அவர், “கதாநாயகியாக நடித்துக்கொண்டு இன்னொரு புறம் நடிகர்களுக்கு மகளாகவும் நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். எனக்கு வில்லியாக நடிக்கவும் ஆசை இருக்கிறது. அந்த மாதிரி கதாபாத்திரத்தை பற்றி நிறைய நாட்கள் யோசித்து இருக்கிறேன்.

நிவேதா என்றால் அழகான பெண் என்று நினைக்கின்றனர். அதே நிவேதா வில்லியாக வந்தால் ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்பதை பார்க்க ஆசையாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.