A+ A-

எதிராக வாக்களித்தவர்களுக்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு – வைரமுத்து

எதிராக வாக்களித்தவர்களுக்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், குறித்த போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததில் 35 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாடலாசிரியர் வைரமுத்து,

‘எதிராக வாக்களித்தவர்க்கும்
நம்பிக்கை தருவதே நல்லரசு.
அச்சப்படும் சிறுபான்மைக்கு
என்ன மொழியில் எந்த வழியில்
நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்?
நம்பிக்கை கொடுங்கள்.
நன்மை விளையும் எனப் பதிவிட்டுள்ளார்.