A+ A-

புர்கா அணிவதற்கான வாய்ப்பிருந்தால் நான் கூட அணிவேன் – ஏர்.ஆர்.ரஹ்மான்

ஒரு ஆண் புர்கா அணியக் கூடாது.  இல்லையெனில் நான்கூட ஒன்றை அணிவேன்  என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான காதிஜா புர்கா அணிந்து மேடை நிகழ்வில் பங்கேற்றது பெரும் விவாதத்திற்கு உள்ளான நிலையில், இது குறித்து ரஹ்மான் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்த அவர்,  “நான் நினைகிறேன் இது மத விடயம் என்பதை விட இது ஒரு உளவியல் விடயம் என்று. இதை நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்.

ஒரு ஆண் புர்கா அணியக் கூடாது  இல்லையெனில் நான்கூட ஒன்றை அணிவேன். அதை அணிந்து கடைக்குச் செல்வதற்கும். நிலையான வாழ்க்கையைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் எளிதானது.

அது உங்களுக்கும் தெரியும். நான் நினைக்கிறேன்  அவள் இதில் சுதந்திரத்தை உணர்கிறார்’ என்று எனத் தெரிவித்துள்ளார்.