A+ A-

சென்சார் சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஜீவாவின் ஜிப்ஸி.. ரிலீஸ் திகதி

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ஜிப்ஸி. இந்த படம் முழுவதும் தயாராகிவிட்ட நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது.

சென்சார் போர்டு பல காட்சிகளை நீக்கிய நிலையில், அதன் பிறகு இறுதியாக பல போராட்டங்களுக்கு பிறகு A சான்றிதழ் வாங்கியுள்ளனர்.

இந்த படம் ஜனவரி இறுதியில் ரிலீஸ் ஆகும் என முன்புகூறினார்கள், ஆனால் சில சிக்கல் காரணாமாக ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் தற்போது மார்ச் 6 ம் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.