A+ A-

எல்லாம் முடிந்த பிறகு முறையிடுவதை ஏற்க முடியாது – வரலட்சுமி


எல்லாம் நடந்து முடிந்த பிறகு பெண்கள் முறைப்பாடு அளிப்பதை ஏற்க முடியாது எனவும், பெண்கள் தங்களை பாதுகாக்க தயார் செய்துகொள்ள வேண்டும் எனவும் நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

சினிமாதுறையில் படவாய்ப்புகளுக்காக பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள வரலட்சுமி தானும் இவ்வாறான கொடுமைகளுக்கு அழைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ”நான் ஒரு வாரிசு நடிகை என தெரிந்தும் கூட தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர். தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் என்னிடம் கூறினர். அப்படி ஒரு வாய்ப்பு வேண்டாம் என மறுத்துவிட்டேன். அப்படி பேசியவர்களின் ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.