மலையாள நடிகை அஹானா கிருஷ்ணா, பிரபல ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இவர்களின் திருமணம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், தற்போது திருமண புகைப்படங்களை இருவரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
நீண்டகால நண்பர்களாக இருந்து காதலித்து வந்த அஹானா மற்றும் நிமிஷ் ரவி, பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.‘நான் ஸ்டீவ் லோபஸ்’, ‘லூகா’, ‘பதினெட்டாம் படி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அஹானா, மலையாள சினிமாவில் கவனம் பெற்ற நடிகையாக உள்ளார்.
அதேபோல், நிமிஷ் ரவி ‘கிங் ஆஃப் கோதா’, ‘ரோர்ஸாச்’, ‘லக்கி பாஸ்கர்’, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
திருமணம் குறித்து அஹானா வெளியிட்டுள்ள பதிவில், 20 வயதில் சந்தித்த தனது சிறந்த நண்பரை, 30 வயதில் கணவராக கரம்பிடித்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
.jpg)
.jpg)
.jpg)