விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள், சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. அதற்கெல்லாம் கிடைக்கும் வரவேற்பை தாண்டி மக்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் 10.
கடந்த வாரம் பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து மணிவண்ணன் வெளியேறியிருந்தார், இந்த வார இறுதியில் யார் வெளியேறுவார் என எதிர்ப்பார்க்கையில் Mid Week எலிமினேஷன் நடந்துள்ளது. அதாவது Leader Exit Poll மூலம் லட்சுமி ப்ரியா எலிமினேட் ஆக போட்டியாளர்களை தாண்டி ரசிகர்கள் மிகவும் ஷாக் ஆனார்கள்.
அவரும் வெளியேறும் போது அந்த ஒரு போட்டியாளரை ஜெயிக்க விடாதீர்கள் என கூறிவிட்டு சென்றார். லட்சுமி ப்ரியா இந்த வாரம் எலிமினேட் ஆனதை தொடர்ந்து வார இறுதியில் எந்த எலிமினேஷனும் இருக்காது என ரசிகர்கள் நினைத்தார்கள்.
ஆனால் தற்போது பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை ஆனந்தி தான் பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறியுள்ளாராம்.
தனது தந்தையின் மறைவு செய்தி கிடைத்ததைத் தொடர்ந்து, ஆனந்தி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பிக்பாஸ் 10 வீட்டில் அடுத்தடுத்து நடந்துள்ள இந்த வெளியேற்றங்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
