புதிய நாயகியுடன் இணைந்து கொண்டாட்டம்!


தமிழ் சினிமாவில்‌ பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ். தற்போது தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 - ம் தேதி வெளிவர உள்ளது.

இதற்கிடையே பாலிவுட்டிலும் தேரே இஷ்க் மெயின் என்ற ஒரு படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சனோன் கமிட்டாகியிருக்கிறார்.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே தனுஷ் ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேற்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.

இதில், நட்சத்திரங்கள் பலர் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது. இந்நிலையில், ஆனந்த் எல்.ராய், கீர்த்தி சனோன், தனுஷ் ஆகியோர் ஷூட்டிங்கில் ஒன்றாக ஹோலி கொண்டாடி உள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.