எனக்கு பணம் வந்து கொண்டே இருக்க காரணமே இதுதான்..நெப்போலியன் ஓபனாக சொல்லிய உண்மை...


நடிகர் நெப்போலியன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் தன்னுடைய வாழ்க்கையை மாற்றிய வசனம் குறித்து நெப்போலியன் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

90ஸ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக மாறிய நெப்போலியனை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. நெப்போலியனின் அறிமுகமே தமிழ் சினிமாவில் வித்தியாசமாக அமைந்தது. 24 வயதில் சினிமாவில் அறிமுகமான நெப்போலியன் அப்போது 60 வயது மதிக்கத்தக்க வில்லன் கேரக்டர்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார்.


அதுவும் ஒரு திரைப்படத்தில் அல்ல அந்த காலகட்டத்தில் அவர் நடித்த பல திரைப்படங்களில் அதிக வயதுடைய வில்லனாக நடித்து வந்தார். தன்னைவிட வயது குறைந்த ஹீரோக்களுக்கு கூட அதிக வயதுடைய வில்லனாக இவர் நடித்தாலும் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். அதுபோல ஒரு கட்டத்தில் இவர் கதாநாயகனாக மாறியிருந்தார். அப்போது அதையும் ரசிகர்கள் ரசித்தனர்.


அரசியலிலும் பிரபலம்

அதிலும் எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்கள் எல்லாம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதற்குப் பிறகு சினிமாவில் குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அதுபோல சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தன்னுடைய மாமா கேஎன் நேருவிற்கு உதவியாளராக இருந்திருக்கிறார்.


அமெரிக்காவில் செட்டில்

சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது அரசியலிலும் கவனம் செலுத்தி வந்த நெப்போலியன் ஆரம்பத்தில் எம்எல்ஏவாக தன்னுடைய பயணத்தை தொடங்கி, அதற்கு பிறகு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். அரசியல், சினிமா என்று பிசியாக இருந்த நெப்போலியன் இப்போது தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார்.




நெப்போலியனின் மூத்த மகன் திருமணம் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்றது. அப்போது அந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. காரணம் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் நான்கு வயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரிலேயே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


நெப்போலியன் பேட்டி

இவருக்கு இப்போது திருமணம் செய்து வைத்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாகும் என்று பலர் நெகட்டிவ் ஆக கமெண்ட் கொடுத்தனர். ஆனாலும் நெப்போலியன் செய்த செயல்தான் சரி என்று அவரை பாராட்டியவர்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நெப்போலியன் பேசிய ஒரு பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




அந்த பேட்டியில் நெப்போலியன் தான் நடித்த முதல் படமான புது நெல்லு புது நாத்து படத்தின் அனுபவம் பற்றி பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், நான் முதல் படத்தில் நடிக்க போறேன் என்றதும் நல்ல மேக்கப் எல்லாம் போட்டு ரெடியா இருந்தேன். ஆனால் பாரதிராஜா முகத்தை கழுவிக்கொண்டு வா என்று சொல்லிவிட்டார். பிறகு வயதான ஒரு கெட்டப் போட்டார்கள். எனக்கே கண்ணாடியில் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது.


பாரதிராஜா செய்த செயல்

பிறகு நடிக்கும் போது முதல் காட்சி என்னிடம் சொன்னார்கள். அதாவது ஒரு வாத்தியாரை தூக்குல போடுற சீன். அதுவும் முதல் முதலில் ஒரு படத்தில் நடிக்க போறேன் இப்படி ஒரு காட்சியில் நடிக்கணுமா என்று மனதிற்குள்ளேயே நெப்போலியன் யோசித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அதை கவனித்த பாரதிராஜா ஏண்டா உனக்கு சீன் பிடிக்கலையா என்று கேட்டிருக்கிறார்.


திருப்பம் ஏற்படுத்திய வசனம்

அதற்கு நெப்போலியன் உண்மையை சொன்னால் இவர் நம்மை அனுப்பி விடுவாரோ என்று பயத்தில் அதெல்லாம் ஒன்னுமில்ல சார் என்று சமாளித்து இருக்கிறார். ஆனால் பாரதிராஜா பார்த்தா சரியா இல்ல கொஞ்சம் இரு என்று ஒரு பேப்பரை எடுத்து ஸ்பாட்டில் சில டயலாக் எழுதி நடித்துக் காட்டினாராம். அதுதான் நெப்போலியன் பேசிய முதல் டயலாக். அதாவது, "வர லட்சுமியை யாருடா தடுத்து நிறுத்த முடியும்? நான் எப்போதுமே நல்லதை தான் சொல்லுவேன்.. நல்லதை தான் செய்வேன். ஜனங்க அதை புரிஞ்சுக்கணும். இந்த டயலாக்கை தான் பேசி இருக்கிறார்.


நெப்போலியன் பேசிய டயலாக்

இந்த டயலாக் என்னுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று அந்த பேட்டியில் நெப்போலியன் பேசி இருக்கிறார். அதுபோல நெப்போலியன் இப்போது அமெரிக்காவில் ஐடி பிசினஸ் செய்து வந்தாலும் தன்னுடைய மகனுக்காக அவர் செய்யும் செயல்களை பார்த்து இவருக்கு மட்டும் இவ்வளவு பணம் எங்கே இருந்து வருகிறது என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

நெப்போலியன் தன்னுடைய மகனின் திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு குடும்பத்தோடு சென்றிருந்தார். அங்கு வைத்து தான் மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார். பிறகு மூன்று மாதங்களாக ஜப்பானிலேயே தங்கி விட்டு இப்போது மீண்டும் அமெரிக்காவிற்கு செல்வதற்கு பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். அப்போது எடுக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் ரசிகர்களிடம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.