நானும் காதலித்தேன் அவர் இப்போது என்னுடன் இல்லை-பாடகி சிவாங்கிக்கு இப்படி ஒரு மறுபக்கமா..!

 நானும் காதலித்தேன், ஆனால் அவரு இப்போ என்னுடன் இல்லை” பாடகி சிவாங்கி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சிவாங்கி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.

இவர், பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார்.

போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய காந்தக்குரலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்ட சிவாங்கி, நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவராக மாறி விட்டார்.

நானும் காதலித்தேன், ஆனால் அவரு இப்போ என்னுடன் இல்லை.. பாடகி சிவாங்கியின் மறுப்பக்கம் | Cwc Shivangi S Breakup Story In Recent Interview

இதனை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அவர் கோமாளியாக இருந்து சமைக்கவே தொடங்கிவிட்டார்.

இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதுடன், ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார்.

நானும் காதலித்தேன்..

அந்த வகையில், பிரபல சேனலுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார். அதில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

நானும் காதலித்தேன், ஆனால் அவரு இப்போ என்னுடன் இல்லை.. பாடகி சிவாங்கியின் மறுப்பக்கம் | Cwc Shivangi S Breakup Story In Recent Interview

அதாவது, “ நான் ஒருவரை காதலித்தேன். அவருக்கும் எனக்கும் சரிவரவில்லை. இதனால் காதல் வாழ்க்கையை விட்டு விலகி விட்டேன். தற்போது தனியாக தான் இருக்கிறேன். என்னுடைய அம்மா- அப்பா காதலுக்கு எதிரி கிடையாது. அவர்களிடம் எனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டாம் எனக் கூறியுள்ளேன். ஏனெனின் எனக்கு காதல் திருமணம் செய்துக் கொள்வதில் தான் விருப்பம்.

வேலை மூலம் வருமானங்களை என்னுடைய அப்பா கவனித்துக் கொள்கிறார். இதனால் வருமான ரீதியாக நான் ஏமாந்தது இல்லை. என்னுடைய அம்மா என்னை போலவே இருப்பார். சமூக வலைத்தளங்களில் இருக்கும் எனக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை உணர்கிறேன்.

நானும் காதலித்தேன், ஆனால் அவரு இப்போ என்னுடன் இல்லை.. பாடகி சிவாங்கியின் மறுப்பக்கம் | Cwc Shivangi S Breakup Story In Recent Interview

என்னை காதலித்தவர் மீது தான் தவறு என நான் கூற விரும்பவில்லை. மாறாக அவருக்கு என்னை பிடிக்காமல் இருக்கலாம்...” என மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன்,“குழந்தை போல் துள்ளித்திரியும் சிவாங்கிக்கு இப்படியொரு பக்கமா?”எனக் கருத்துக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.