என் அப்பா இறப்பை கைத்தட்டி கொண்டாடினார்கள்: பிரபல நடிகர் மனந்திறந்தார்


தனது அப்பாவின் மரணத்தின் போது நடந்த அவலம் பற்றிய நடிகர் பிரித்திவிராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

பிரித்திவிராஜ் பேட்டி ஒன்றில் தன்னுடைய அப்பா இறந்த போது நடந்த சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அதாவது,“ என்னைப் பொறுத்தவரை பிரபலங்கள் மறைந்த பின்னர் அவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் அனுமதிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இதன்படி, என்னுடைய அப்பா இறந்த போது மலையாள சினிமாவில் இருந்து பல பிரபலங்கள் வருகை தந்திருந்தனர்.

அப்போது என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் மிகந்த மனம் வருத்தத்தில் இருந்தனர். அந்த சமயம் மோகன்லால், மம்முட்டி போன்ற நடிகர்கள் வரும் பொழுது கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனால் அவர்கள் என்னுடைய குடும்பத்தினரின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டார்கள்...” என பேசினார்.

பிரித்விராஜின் தந்தை சுகுமாரன், கடந்த 1997ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.