மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த நடிகை அஞ்சலி.. வேற லெவல் கலக்கல் பிக்ஸ் இதோ!

 நடிகை அஞ்சலி, மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது சோச‌ல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.

அதனை தொடர்ந்து 'அங்காடி தெரு' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவரின் நடிப்பு அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

தூங்காநகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், நாடோடிகள் 2, கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல படங்கள் நடித்து வந்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது தமிழை காட்டிலும் தெலுங்கு சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான தெலுங்கு படங்கள் அனைத்தும் ஹிட் என்றே சொல்லலாம். இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார். மேலும் இவருக்கென தனி தெலுங்கு ஆடியன்ஸும் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்ட்டிவாக இருந்து வரும் அஞ்சலி, மாடர்ன் உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர், மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டியபடி போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது சோச‌ல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறார்.