பிக் பாஸ் ஜூலியின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் தான் ஜூலி.
அதில் அவரது போராட்ட திறனை கண்டு மக்கள் தமிழ்பெண், வீர தமிழச்சி என்றெல்லாம் புகழ்ந்து பேசினார்கள்.
அதில் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி பிரபல டிவியில் முதன்முறையாக ஒளிபரப்பாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சி மூலம் கெட்டப்பெயர் தான் சம்பாதித்தார் என்றே கூறலாம். ஆனால் தன் மீது உள்ள மக்களின் அந்த பார்வையை அப்படியே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாற்றினார்.
இந்த நிலையில், தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் ஜுலி நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இதனை தொடர்ந்து அவரது சமூக வலைத்தளப்பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
அந்த வகையில், சேலையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “அட நம்ம பிக்பாஸ் ஜுலியா இது? ஆளே மாறிவிட்டாரே..” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.