நடிகை குஷ்பு ஏற்கனவே அவ்னி சினிமேக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதோடு இந்த நிறுவனத்தின் மூலமாக சுந்தர் சி நடித்த மற்றும் இயக்கிய படங்களை தயாரித்து வந்தார்.
இந்நிலையில், தற்போது 2ஆவதாக புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அவ்னி மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை குஷ்பு தொடங்கியிருக்கிறார்.
தற்போது குஷ்பு பென்ஸ் மீடியாவுடன் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்குகிறார்.
இந்தப் படத்தில் சந்தோஷ் ஹீரோவாக நடிக்கிறார். இவர் பொன்னியின் செல்வன் படத்தில் இளம் வயது ஆதித்த கரிகாலனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முழுக்க காதல், ரொமான்ஸ் மற்றும் காமெடி கலந்த ஒரு படமாக சிறிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. தற்போது இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.