“தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக என் இதயம் துடிக்கிறது.நமது நாடு (மதரீதியாக) அதிகம் பிரித்து அணிதிரட்டப்படும் ஒரு சூழலில், ஒரு குறிப்பிட்ட மதம்/சமூகத்திற்கு எதிரான வெறுப்பாக திசைதிருப்பப்படாமல் இருப்பது ஒரு குடிமக்களாக நமது கடமை” என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகை ஆண்ட்ரியா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவு, “ பஹல்காமிற்கு நானும் சுற்றுலா பயணியாக சென்றுள்ளேன். தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக என் இதயம் துடிக்கிறது. அதே போல இந்த நிகழ்விற்கு பின் இன்னும் கூடுதல் கண்காணிப்பு, சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளள காஷ்மீர் மக்களை நினைக்கையில் என் இதயம் உடைகிறது.
நமது நாடு (மதரீதியாக) அதிகம் பிரித்து அணிதிரட்டப்படும் ஒரு சூழலில், ஒரு குறிப்பிட்ட மதம்/சமூகத்திற்கு எதிரான வெறுப்பாக திசைதிருப்பப்படாமல் இருப்பது ஒரு குடிமக்களாக நமது கடமை. நான் என் கருத்தை அடிக்கடி சொல்பவள் அல்ல, ஆனால் இந்த சூழலில் இதை சொல்ல வேண்டும் என உணர்ந்தேன். இங்கே வெறுப்பிற்கு இடம் இல்லை, எனது பதிவின் பின்னுட்ட பகுதியிலும் இல்லை, நம் உலகிலும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ரியாவின் பதிவு வெளியானவுடன், இணையத்தில் பலர் அவரது கருத்தை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். இந்த விமர்சனங்களைப் புரிந்து கொள்ள, பஹல்காம் தாக்குதலின் சில முக்கிய அம்சங்களைப் பார்க்க வேண்டும்.
பிபிசி செய்தி மற்றும் பிற ஊடக அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலில் தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து, அவர்களின் மத அடையாளத்தைக் கேட்டு, இஸ்லாமியர் இல்லாதவர்களைத் தேர்ந்தெடுத்து கொலை செய்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆண்ட்ரியாவின் இந்த பேச்சு அறியாமையாக தெரியவில்லை ஆபாசமாக தெரிகிறது என்று கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள் ரசிகர்கள்.