சூப்பர் குட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுப்பிரமணி பின்னர் நடிகர் ஆனார். சூப்பர் குட் சுப்பிரமணி என்ற பெயரில் பல படங்களில் நடித்தார். முண்டாசுப்பட்டி, கன்னி மாடம், காவல்துறை உங்கள் நண்பன், ஜெய்பீம், ஆனந்தம் விளையாடும் வீடு, பிஸ்தா, பரமன் உள்பட பல படங்களில் நடித்தார். சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்தார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரைப்பட துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது 4ம் நிலை புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் அவர் மருத்துவ செலவிற்கும், குடும்ப செலவிற்கும் நண்பர்களை கொண்டு சமூக வலைத்தளங்கள் மூலம் உதவி கேட்டு வருகிறார்.