தற்போது இளைஞர்கள் மனதை கிறங்கடிக்கும் நடிகை திரிஷாவுக்கு போட்டியாக இவரா!

 


சென்னை: "அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.. வயதுதான் திரிஷாவுக்கு பிரச்னையாக மாறியிருக்கிறது. 50 வயதை தொட்டு விடக்கூடிய நடிகையாக இருந்தாலும் இன்னும் இந்த பீல்டில் நிலைத்து நிற்க கூடியவர் திரிஷா.. லேடி சூப்பர் ஸ்டார் யார் என்பதில்தான், நயன்தாராவுக்கும், திரிஷாவுக்கும் போட்டியாக இருந்து வருகிறது" என்று பத்திரிகையாளர் பாண்டியன் கூறியிருக்கிறார்.

1999-ம் ஆண்டு மிஸ் சென்னையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரிஷா.. ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார். 2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அவர் நடித்த சாமி, கில்லி, ஆறு போன்ற அடுத்தடுத்த அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. 40 வயதை கடந்தும், திரைத்துறையில் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் திரிஷா, தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு திரிஷாவின் மார்க்கெட் , டாப்பில் எகிறிவிட்டது.. விஜய், அஜித் என டாப் ஸ்டார்களுடன் தொடர்ந்தும், அதிகமாகவும் நடித்து வருகிறார்.

அந்தவகையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா நடித்துள்ள "குட் பேட் அக்லி" படம், உலகம் முழுவதும் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் வெளியானதிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.. ரூ.270-300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், இதுவரை ரூ.63 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக சாக்னில்க் தெரிவித்துள்ளது.

இந்த படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கும் அதேவேளையில், எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்து வருகிறது. அதாவது, சில மாதங்களுக்கு முன்பு, குட் பேட் அக்லி படத்தில் திரிஷாவின் கேரக்டர் மிக மிக முக்கியமானது என்றும், கதைக்கு திரிஷாவின கதாபாத்திரம் தான் முக்கிய புள்ளியாக அமையப் போகிறது என்றும் தகவல்கள் றெக்கை கட்டி பறந்தன.

அதுமட்டுமல்ல இந்த படத்தின் கதையை அஜித்தே த்ரிஷாவிடம் சொன்னதாகவும் திரிஷாவின் கேரக்டரையும் அஜித் தான் அவரிடம் விளக்கியிருப்பதாகவும் ஆதிக் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால், தற்போது படத்தில் திரிஷாவின் கேரக்டர் உப்புக்கு சப்பாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வழக்கமாக சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் திரிஷா, தற்போது கோபமான பதிவை பதிவிட்டுள்ளார்.. தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ''விஷத்தன்மை கொண்ட நபர்களே... நீங்கள் எல்லாம் எப்படி வாழ்க்கையை வாழ்கிறீர்கள்? எப்படி நன்றாக தூங்குகிறீர்கள்? சமூக வலைதளங்களில் மற்றவர்களைப் பற்றி அர்த்தமற்றவற்றைப் பதிவிடுவது உங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறதா?

உங்களுக்காகவும், உங்களுடன் வாழும் நபர்களுக்காகவும் உண்மையில் மிகவும் வருத்தப்படுகிறேன். பெயர் தெரியாத கோழைகளே... கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக...'' என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக த்ரிஷாவிற்கு திருமணம் முடிந்து விட்டது என பரவிய புதிய செய்திக்கு த்ரிஷா கொடுத்த பதிலடியாக இது இருக்கலாம் என அவருடைய ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழக தமிழா பாண்டியன் பேட்டி தந்துள்ளார்.. அதில், "திரிஷாவை பொறுத்தவரை, 23 வருடங்களாக சினிமாவில் ஆளுமையாக இருக்கிறார் .. திரைப்படத்துக்கு வருவதற்கு முன்பு "வெல்கம் கேர்ள்ஸ்" எனப்படும் வரவேற்பாளராக இருந்தார் திரிஷா.. இதற்கு பிறகுதான் சினிமாவுக்குள் நுழைந்தார்.

வசதியான வீட்டு பெண் தோற்றமுள்ளதால், குரூப் டான்ஸில் ஆடினார்.. அப்போது இதற்கு ஒருநாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் சம்பளம்.... பிறகு ஒரு தயாரிப்பாளர் கண்ணில் திரிஷா பட்ட பிறகுதான், மௌனம் பேசியதே படத்தில் வாய்ப்பு வருகிறது.. அந்த பட தயாரிப்பாளர், புதுமுகமான திரிஷாவுக்கு வாய்ப்பு தந்ததுமே, அவருடன் நெருக்கமாக திரிஷா இருப்பதாக, அந்த காலத்திலேயே ஏராளமான கிசகிசுக்கள் வலம்வந்தன.. 

பிளஸ் 2 முடிக்கும்போது யாராக இருந்தாலும் அவர்களுக்கு 18 வயதாகியிருக்கும்.. பிறகு 3 வருடம் கல்லூரி படிப்பு என்றால் 21 வயதாகிவிடும். 21 வயதில இருந்து 23 வயதுவரை சினிமாவில் சின்ன சின்ன ரோல்கள், வெல்கம் கேர்ள்ஸ் என்று வருடங்கள் கழிந்தது.. பிறகு 23 வயதிலிருந்து தான் ஹீரோயினாக நடிக்க துவங்கினார் திரிஷா..

இப்போது அவர் ஹீரோயினாக நடிக்க வந்தே 23 வருடமாகிவிட்டது. அப்படியானால், இப்போது 46 அல்லது 47 வயதாகிறது திரிஷாவுக்கு. ஆனால் எப்போது கேட்டாலும், 41 வயது என்றுதான் சொல்வார். வயது ஒரு பிரச்சனை இல்லை என்றாலும்கூட, சர்ச்சைக்குரிய நாயகியாகவே திரிஷா இருந்து வருகிறார்.

காதல் முறிவு. வருண் மணியன் என்ற தொழிலபதிபருடன் திரிஷா நெருக்கமாக இருந்தார். திரிஷாவை விட, வருண் மணியனுக்கு 6 வயது குறைவாகும்.. இவரை திரிஷா திருமணம் செய்ய போவதாக செய்திகளும் அப்போது வெளியாகின.. இருவரும் பல்வேறு ஊர்களுக்கு சென்று வந்தனர்.. ஹெலிகாப்டரில் இமயமலைக்கும் சென்றுவந்தார்கள். ஆனால், இந்த காதல் நிறைவேறாமலேயே போய்விட்டது. அதனால் அவரை விட்டு பிரிந்தார் திரிஷா. இன்றும் தமிழ் திரைப்படங்களில் தவிர்கக முடியாத நாயகியாக வலம்வருகிறார் .

இப்போது மீண்டும் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.. வயதுதான் திரிஷாவுக்கு பிரச்னையாக மாறியிருக்கிறது. 50 வயதை தொட்டுவிடக்கூடிய நடிகையாக இருந்தாலும் இன்னும் இந்த பீல்டில் நிலைத்து நிற்க கூடியவர் திரிஷா.. லேடி சூப்பர் ஸ்டார் யார் என்பதில்தான், நயன்தாராவுக்கும், திரிஷாவுக்கும் போட்டியாக இருந்து வருகிறது.

சோஷியல் மீடியா போட்டி பாலக்காட்டு பிராமின் திரிஷா என்றால், கேரளாவை சேர்ந்த நாயர் நயன்தாரா.. இந்த இரு கேரள நடிகைகளுக்குதான் பயங்கரமான போட்டி.. இந்த போட்டியில் விஜய் ரசிகர்கள், திரிஷாவை சப்போர்ட் செய்கிறார்கள். அஜித் ரசிகர்கள் நயன்தாராவை சப்போர்ட் செய்கிறார்கள்.. இது இப்போது சமூகவலைதள சண்டையாகவும் மாறிவிட்டது. விஜய் கட்சியில் திரிஷா பதவிக்கு வருவதாகவும் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்..

இதற்குதான் திரிஷா ரியாக்‌ஷன் செய்துள்ளார்.. இதனால் விளம்பரம் கிடைக்கும் என்று நினைக்கிறார். தன்னை பற்றின கிசுகிசு வரவேண்டும் என்பதே திரிஷா, நயன்தாரா போன்றோரின் விருப்பம்.. 50 வயதை எட்டும் திரிஷாவுக்கு இன்னும் திருமணம் இல்லை. ஆனால், பல்லாயிரம் கோடி பணம் இருக்கிறது.. தன் அப்பாவை கூட திரிஷா கவனித்து கொள்வதில்லையாம்.. அம்மா, மகளுக்கு எதுக்கு இத்தனை கோடி? " என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.