பிரபல நடிகையை சிறையில் அடைத்து சித்ரவதை: என்ன நடந்தது?

பாலிவுட் நடிகை காதம்பரி ஜெத்வாணியை துன்புறுத்திய வழக்கில், ஆந்திர உளவுத்துறை முன்னாள் தலைவர் ஆஞ்சநேயலு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

மும்பையைச் சேர்ந்த நடிகை காதம்பரி ஜெத்வாணி. இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். காதம்பரி ஜெத்வாணியின் தந்தை ராணுவ அதிகாரியாகவும், தாயார் ரிசர்வ் வங்கி அதிகாரியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். 

இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மும்மையை சேர்ந்த தொழிலதிபரின் மகன் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக காதம்பரி குற்றம் சாட்டினார். ஆனால், காதம்பரி பொய் புகார் அளித்ததாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்ததன் அடிப்படையில், வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதுகுறித்து நடிகை மீண்டும் புகார் அளிக்கலாம் என்ற அச்சத்தில், அவர் மீது பொய்யாக நில மோசடி புகார் தொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அண்மையில் பேசிய காதம்பரி ஜெத்வாணி, மும்பை தொழிலதிபரின் மகனுக்கு ஆதரவாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாகேஸ்வரராவ் என்பவரின் மகன் வித்யாசாகர், தனக்கு எதிராக சதி வலை பின்னியதாக சாடினார்.