'மதராசபட்டினம்' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்த லண்டன் நடிகை எமி ஜாக்சன், அதன் பிறகு 'தாண்டவம், தெறி, 2.0' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக 'மிஷன் சாட்டர்-1' என்ற படத்தில் நடித்திருந்தார்.
மேலும் ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணத்திற்கு முன்பே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்த எமி ஜாக்சன், பின்னர் அவரை பிரிந்து விட்டார். அதன் பிறகு எட் வெஸ்ட் விக் என்ற ஹாலிவுட் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட எமி ஜாக்சனுக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறப்புக்கு பிறகு ஓராண்டு காலமாக நடிக்காமல் இருந்து வந்த எமி ஜாக்சன் தற்போது மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார். இது குறித்து அவர் தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ஒரு வருடத்திற்கு பிறகு மகன்களைப் பிரிந்து மீண்டும் வேலைக்கு செல்ல போகிறேன். இது மிகவும் கடினமாக உள்ளது.
எப்போது வீடு திரும்பி மகன்களை பார்ப்பேனோ என்ற ஏக்கம் உள்ளது. இப்படி என்னைப் போலவே என்னை பிரியும் கஷ்டம் என் மகன்களுக்கும்தான் இருக்கும். அதை நினைக்கும் போது சற்று ஆறுதலாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.